அவள் சொல்கிறாள்
அம்மணமாக திரிவது
என் பிறப்புரிமை
நான் சீட்டியடித்துச் சொல்கிறேன்
அம்மணக்குண்டி
அதோ பாரு அம்மணக்குண்டி
அவள் சொல்லுகிறாள்
என் உரிமையில் தலையிடுகிறாய்
நான் சொல்லுகிறேன்
அம்மணமாய்த் திரிவது உன் உரிமை
அம்மணக்குண்டி என்று சொல்லுவது
என் உரிமை
இதில் எங்கே இருக்கிறது
சுதந்திர மீறல்
இந்த அரட்டையில் இடை புகுந்த
ஒரு பெருசு சொன்னது
அம்மணக்குண்டி ராஜ்ஜியத்தில்
கோவணம் கட்டியவன்
பைத்தியக்காரன்
(எனக்கு இ-மெயில் வந்த கவிதை)
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
thala superu....:-)..
ம்ம்ம்ம்....புரிகிறது! என்ன செய்ய ? பைத்தியமில்லை என்று நிரூபித்துக் கொள்வதற்காக கோவனத்தை அவிழ்த்தா எறிய முடியும்? விடுங்கள் பைத்தியமாகவே இருந்து கொள்வோம்.
Post a Comment