Pages

Sunday, August 10, 2008

இரணியனின் பார்வைக்கு

ஆத்திரம் கண்ணை மறைக்க கூடாது.


எதை சொல்கிறேன் என்பதை புரியாமல் பதில் அனுப்பியுள்ளீர்கள். மகிழ்ச்சி. இந்தியாவில் ஆரம்ப காலத்தில் கம்யூனிச இயக்கத்தை தோற்றுவித்த தலைவர்களில் பெரும்பாலானோர் பிரமாணர்களாக இருந்தார்கள். அக்காலத்தில் ஓரளவு கல்லி அறிவு பெற்றவர்களாகவும், வசதி வாய்ப்பு கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பிரமாணர்களாக இருந்தாலும் உழைப்பாளி மக்களின் நலன்களுக்கான சிந்தனைகளை கொண்டு இருந்தனர். அதனாலேயே அவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். அமைப்பை உருவாக்கினர். இதை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.


தமிழகத்தில் வேட்டி, சட்டை போடுவது என்ற பண்பாட்டை நாம் கடைபிடிப்பது போல், சுர்ஜித் பஞ்சாபியர்களின் பண்பாடான தலைப்பாகையை அணிந்திருந்தார். சீக்கியர்களின் மத அடையாளம் என்பது இடுப்பில் வாள் வைத்துக் கொள்வது. இதில் எங்கிருந்து வருகிற புனைசுருட்டு.

ஒருவேளை தமிழக மண்ணின் தன்மை, நடைமுறை போன்றவற்றை புரிந்து, தெரிந்து கொள்ளாத இரணியன், பஞ்சாபில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அன்றைய கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பில்லைதான். அதனால்தான் உண்மையை ஜீரணிக்க முடியாமல் புனைசுருட்டு என்கிறார்.


சுர்ஜித் பகத்சிங் ஆரம்பித்த நவஜவான் சபாவில் இருந்து பணியாற்றவில்லை என்பதை ஏன் மறுக்க முடியவில்லை. பகத்சிங் தலைமறைவு காலத்தில் இருந்த போது தலைப்பாகை அவருக்கு தடையாக இருந்தது. ஆகவே,அதனை அவர் தூக்கி எரிந்தார். நாம் இனறு பேண்ட் சட்டை போடுவது போல.

பனமரத்தில் தேள் கொட்டினால், தென்னை மரத்தில் நெறி கட்டிக் கொண்டதாம் என்று கூறுவார்களே அதுபோல தேவையில்லாமல் நிகழ்வுகளை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

நான் தத்துவம் என்று சொன்னது பேச எவ்வளவோ விஷயங்கள், நடைமுறை பிரச்சனைகள் இருக்கிறது. அதனைவிட்டுவிட்டு, நாட்டின் விடுதலைக்கு போராடி 10ஆண்டுகாலம் சிறை, 8ஆண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தலைவரை கொச்சைபடுத்தாதீர்கள் என்பதுதான்.சோம்நாத் சட்டர்ஜி பூணூல் போட்டதற்கு நான் நாள் நட்சத்திரம் கேட்கவில்லை. என்ன ஆதாரம் என்றுதான் கேட்கிறேன். அதற்கு பதில் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக கூறுவது உங்ளுக்கு கை வந்த கலைதான். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

மேற்கு வங்க அமைச்சரும், மத்திய குழு உறுப்பினருமான சுபாஷ் சக்கரவர்த்தி பேசியதாக கூறியதை நான் மறுக்கவில்லை. இந்த பொறுப்பற்ற பேச்சிற்காக மேற்கு வங்க மாநில கட்சி மாநாடு சுபாஷ் சக்ரவர்த்திக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அவர் மத்தியக்குழுவில் இருந்து 19வது அகில இந்திய மாநாட்டில் நீக்கப்பட்டுள்ளார். அதுசரி, நீங்கள் எதையும் முழுமையாக படித்து பழக்கமில்லையே.


நாட்டில் உழைப்பாளிகளுக்கு எவ்வளவோ பிரசச்னை இருக்கிறது. அதை பேசுவதை விட்டுவிட்டு-நேரம் போகவில்லை என்று ஏதாவது பிதற்றிக் கொண்டு இருக்காதீர்கள்.


தானும் படுக்கமாட்டேன் தள்ளியும் படுக்கமாட்டேன் என்பது போல நாங்களும் வளரமாட்டோம், நாட்டையும் முன்னேற விட மாட்டோம் என்ற கொள்கை கொணடவராயிற்றே நீங்கம். பிறகு எப்படி உங்களால் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசமுடியும்...............