`பதவி உயர்வு வழங்குவது போல் தண்டனை கொடுப்பது’ படிப்பதே வேடிக்கையாக இருக்கிறதல்லவா?
அப்படிதான் தின (திணிப்பு)மணியின் செய்திகளும் உள்ளன.
இந்துத்துவா வாதிகளின் கையில் சிக்குண்டு திணிப்புமணியாகி போன தினமணி, மத்திய அரசை எதிர்த்து, மாநில அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட்டுகள் போராட்டம் நடத்தினால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பெரிதாக போடுவதை நடுநிலை என்று வைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் இவர்களின் போராட்டம் இரட்டை வேடம் என்று கட்டுரை எழுதுவதை என்னவென்று எடுத்துக் கொள்ளவது.
மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் பல்லாயிரக்கணக்கான அருந்ததிய மக்கள் ஒன்று திரண்டு சென்னையில் பேரணி நடத்தினார்கள். தமிழகத்தில் முதன்முறையாக சாதி இயக்கங்களே கண்டுகொள்ளாத அருந்ததி மக்களை ஒன்று திரட்டி, மாநாடுகள் நடத்தி, வர்க்கப் போர்முனைக்கு அழைத்து வந்து, உரிமைக்காக போராடினால், இதன்மீதான நியாயத்தை புரிந்து கொள்ளாமல், மனு சிந்தனையோடு தினமணி ஒருகாலம் படம் போட்டுவிட்டு செய்தியே போடவில்லை.
தினப்புளுகு ஏடும் இதே பணியையே பின்பற்றியது. ஆனால், விஞ்ஞானத்திற்கு புறம்பாக ராமர் பாலம் உள்ளதாகவும், அதனை இடிக்க கூடாது என்றும் மதவெறியர்கள் சென்னையில் உண்ணாவிரதமிருந்தால் அதனை பெரிதாக போடுகிறார்கள்.
என்னே! இவர்களின் சமூக முற்போக்கும், நடுநிலைமையும் நினைத்தால் வெட்கமடைய செய்கிறது.முதலாளித்துவ ஏடுகள் சமூக பிரச்சனைகளில் சிலவற்றில் சில நேரங்களில் நியாயமாக நடந்து கொண்டாலும், வர்க்கப் போராட்டங்களுக்கு எப்போதும் எதிராகவே உள்ளன.
No comments:
Post a Comment