Pages

Thursday, August 16, 2007

பூனைக்குட்டி வெளியே வந்தது

“குந்த குடிசையில்ல நாய் பேசற பேச்சை பாரு” என்று பரவலாக நகர்ப்புறங்களில் பேசக் கேட்டிருப்போம்.
நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத குடும்பங்கள் லட்சக்கணக்கில் உள்ளன. இவர்கள் அனைவரும் பிழைப்பு தேடி வந்தவர்களே. உயிரை பணையமாக வைத்து, ரத்தத்தை சிந்தி உழைத்து, வாய்வயிற்றைக் கட்டி சிறுகசிறுக சேர்த்து வைத்தப் பணத்தில் ரியல் எஸ்டேட் முதலைகளிடம் கொட்டி இடம் வாங்குகிறார்கள். அந்த இடம் கண்டிப்பாக பட்டா நிலமாக இருக்க வாய்ப்பில்லை.
குந்த சொந்தமாக ஒரு குடிசையாவது வேண்டுமென்ற உந்துதலில், ஆளும் கட்சிகாரர்கள் மடக்கி வைத்துள்ள நிலத்தை வாங்கிக் கொள்கிறார்கள். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் புறம்போக்கு நிலத்திற்கு ஏகப்பட்ட விலையை சொல்லி ரியல்எஸ்டேட் முதலைகள் கொள்ளையடிக்கிறார்கள். அதிகாரிகளும் தங்களுக்கு சேரவேண்டிய பங்கு வந்து சேர்ந்தவுடன் ஏழை மக்கள் மீது கரிசனம் உள்ளவர்கள்போல், தெரு, மின்விளக்கு, குடிநீர் என அடிப்படை வசதிகளை ஓரளவிற்கு செய்து கொடுக்கிறார்கள். ஆனால் பட்டா மட்டும் தர மறுக்கிறார்கள்.
இதற்கு அதிகாரிகள் கூறுவதை கேட்டால் வாயல் சிரிக்க முடியாது. “ சார், அந்த இடம் நீர்வழிப்புறம்போக்கு சார். இந்த இடம் வாய்க்கால் புறம்போக்கு சார், அந்த இடம் சொல்றீங்க பாருங்க அதுவந்து ஏரி புறம்போக்கு சார், அது கோயில் நிலம், அதுல எப்படி சார் பட்டா கொடுக்க முடியும். நீங்களே சொல்லுங்க? ஆக்கிரமிச்சு வைச்சியிருக்கானுங்க,” என்பார்கள். இதுதான் அதிகாரத்தில் உள்ள எடிபிடிகளின் குரலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
`தனக்கு கீழே ஒருவன் எப்போதும் இருக்க வேண்டும். அவன் எனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற சாரம்சத்தில்தான் தமிழக சாதி கட்டமைப்பு உள்ளது. இந்த ஆதிக்க சாதி வெறிப்பிடித்த, சாதி வெறிகளுக்கு அடிநாதமாக உள்ள மனுதர்மத்தை கடைபிடிக்கும் இந்துதுவா வாதிகளின் கையில் தற்போது `தினமணி’ நாளேடு உள்ளது.
இந்த மதவாதிகளின் வஞ்சக குரலாக `தினமணி’யில் வியாழனன்று (ஆக.16) நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக நிலப் போராட்டம் உள்ளது என்ற தோனியில் செய்தி வந்துள்ளது. இது ஏதோ சாதாரணமான செய்தி அல்ல. மனுதர்மத்தின் வெளிப்பாடு. மனுதர்மத்தை கடைபிடிக்கும் பாப்பான், தான் கூறவந்ததை எப்போதுமே நேரடியாக கூறாமல், நடுநிலையாக கூறுவதுபோல், வஞ்சகம் செய்வான். அப்படிதான் இந்த செய்தியைப் பார்க்க வேண்டும். இத்தகைய கருத்துக்களுக்கு நடுத்தர வர்க்கத்தினர் எப்போதும் ஆட்பட்டுவிடுவார்கள். அவர்களுக்கு தொழிலாளி வர்க்கத்தின் வலியும் தெரியாது, முதலாளிகளின் சூழ்ச்சியும் புரியாது. கண்கெட்ட பிறகு சூரியனை கும்பிடும் அதிபுத்திசாலிகள் இவர்கள்.
குடிமனைப்பட்டா இல்லா மக்களை அணிதிரட்டி குடிமனைப்பட்டா வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் சென்னையில் மட்டும் 10 வட்டாட்சியர் அலுவலங்கள் முன்பு நடத்திய போராட்டங்களில் 25ஆயிரத்திற்கும் அதிகமானோர் பட்டா கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதன் பின்னராவது பிரச்சனையின் தீவிரத்தை கருதி அரசு உடனடி நடவடிக்கையில் இறங்காமல் உள்ளது.
எப்போதும் உழைக்கும் மக்களின் நலனை முன்னிறுத்தியே போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்துக்கு செவி சாய்த்து, போராட்டத்தின் நியாயம் கருதி அரசு பட்டா கொடுத்துவிட்டால், சாதி கட்டமைப்பு தகர்ந்து போய்விடும். ஏழைகள் சமூகத்தில் முன்னேற கூடாது என்ற வஞ்சக எண்ணத்தோடு செய்தி வெளியிடுகிறது `தினமணி’.
நடுநிலை என்று கூறிக்கொண்டு இப்படி நரி சிந்தனையோடு தினமணி செய்தி வெளியிடுவதில் இருந்து, பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது தெரிகிறது. வர்க்கப் பாசம் புரிகிறது. தினமணி திணிப்புமணியாக மாறிவிட்டது.

No comments: