Pages

Sunday, December 23, 2007

வரலாறான புறக்கணிப்பு


வரலாறான புறக்கணிப்பு

சில நேரங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிகழ்வுகள் நடப்பதுண்டு. அப்படித்தான் உலக மனித உரிமை தினமான 2007 டிச.10 அன்று மும்பையில் ஒரு வர லாற்று நிகழ்வு நடைபெற்றது.

நாள்தோறும் 15லட்சம் மக்கள் பயணம் செய்யும் அந்த மும்பை புறநகர் ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். நெரிசல் நேரத்தில் ஒரு சதுர மீட்டரில் 17-18 பேர் மூச்சுத் திணறலோடு ஒரு மணி நேரம் ஒற்றைக் காலில் நின்று தவமிருப்பது போல் பயணம் செய்வார்கள். எஞ்சியவர்கள் வெளவால்களாய் படிகளில் தொங்கியபடி பயணம்தான். இதனால் இந்த வழித்தடத்தில் ஆண்டு தோறும் 1000 பேராவது கீழே விழுந்து இறந்து போவது தொடர்கதையாய் இருக்கிறது.

மும்பையின் புறநகரான விரார்-சர்ச்கேட் மார்க்கத் தில் போதிய அளவு ரயில்களை இயக்காமல் மனிதாபி மான மற்ற முறையில் பயணிகளை ரயில்வே நிர்வாகம் நடத்தியதுதான் இத்தனைக்கும் காரணம்.இதற்கு தீர்வே இல்லையா? எப்போது இந்த கொடுமை தீரும்? யார் நடவடிக்கை எடுப் பது? மக்களை நேசிக்கும் வாலிபர் சங்கம் அங்கு வந்து நின்றது.

“பயணிகளை விலங்குக ளாக நடத்தாதே” என்று முழக் கத்தை முன்வைத்து 2004 நவம்பர் மாதத்தில் வாலிபர் சங்கம் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 20ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். இதனை ரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத்திடம் வாலிபர் சங்கம் வழங்கியது.

“பயணம் எங்கள் உரிமை” என்று கூறி 2005 டிச.10 அன்று சத்தியாகிரகப் போராட்டம் நடத்த வாலிபர் சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சிபிஎம் மும்பை கமிட்டி உறுப்பினர் கே.கே. பிரகாசன், வேணுகோபால் உள்ளிட்டு 12 வாலிபர் சங்க ஊழியர்கள் மற்றும் அந்த வழியே சென்ற 3 பெண்கள் உள்பட 18 பேர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசாரின் இந்த மிருக தாக்குதலையடுத்து கலாச்சார அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், அப்பகுதியில் செயல்படும் அரசியல் கட்சி கள், அமைப்புகள் உள்ளிட்ட வைகளை இணைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தலைமையில் ப்பர்வாஸ் ஆதி கார் அந்தோலன் சமிதி (பாஸ்) அமைக்கப்பட்டது. அதன் கன்வீனராக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் சைலேந்திர கேம்பல்.

2006 டிச.10 அன்று யெச்சூரி கொடியசைத்து துவக்கி வைக்க வாலிபர் சங்கத்தினர் 12 கிலோ மீட்டர் தூரம் கண்டன பேரணியை நடத்தினர். மக்களின் மனக் குமுறலையும், கோபாவேசத்தையும், துன்ப துயரத்தையும் ஒருமுகப்படுத்திய வாலிபர் சங்கமும், பாஸ் அமைப்பும் “விரார் பகுதிக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு ரயில் விட வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து டிச.10 அன்று ரயில் புறக்க ணிப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன. அந்தப் பகுதியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஆதரவளித்தன.


ரயில்கள், பிளாட்பாரங்கள், வீதிகள் தோறும் சென்று 50 லட்சம் துண்டு பிரசுரங்கள் மக்களிடையே விநியோகித்தனர். போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு அலை பெருகியது. போராட்டத்தை சீர்குலைக்க டிச.10 அன்று 20 கூடுதல் சர்வீசை இயக்குவதாக நிர்வாகம் அறிவித்தது. பயணத்தில் வாடி வதங்கி கந்தலாகிப் போன மக்கள் இதனை ஏற்கவில்லை. சைலேந்திர கேம்பல், பிரகாசன் மற்றும் வாலிபர் சங்க ஊழியர்கள் மீது காவல் துறையினர் அவதூறுப் பிரச்சாரம் செய்தனர். இதற்கும் மக்கள் பலியாகவில்லை.

விடிந்தது டிச.10. விரார்-சர்ச்கேட் மார்க்கத்தில், விரார்-தகிசார் இடையே ஓடும் ரயிலில் ஏற காலை 6 மணி முதல் ஒருவர் கூட வரவில்லை. மாலை 6 மணி வரை இதே நிலைமை நீடித்தது. 12கிலோ மீட்டர் தூரம் மீண்டும் மீண்டும் காலியாக, கதவுகள் மூடிய படியே ரயில்கள் ஓடின. அதிர்ந்தது ரயில்வே நிர்வாகம். ஒரு பயணியைக் கூட பார்க்க முடியவில்லை. பயணிகளின் சத்தத்தை கேட்க முடியவில்லை என்று கூறி கதவு மூடிய காலி ரயில்களையும், பிளாட் பாரங்களையும் மீண்டும் மீண்டும் காட்டி போராட்டம் வெற்றி என்பதை மின்னணு ஊடகங்கள் படம் பிடித்தன.


இந்த நிலையிலும் மாநில முதலமைச்சர் விலாஷ் ராவ் தேஷ்முக், 15லட்சம் சாதாரண பயணிகளை பற்றி கவலைப் படாமல், மும்பையில் ஏசி ரயில் இயக்க வேண்டுமென்று தான் ரயில்வே அமைச்சரை கேட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் மகாராஷ்ட்ரா அரசின் உண்மையான முகம்.

டிச.10 உலக மனித உரிமை நாளில் ‘பயணம் உங்கள் உரிமை’ என்பதற்கான புறக்கணிப்பு போராட்டம் புதிய வரலாற்றை ஏற்படுத்தியது.-


தகவல்: பீப்பிள்° டெமாக்ரஸி

No comments: