Pages

Tuesday, August 14, 2007

தண்ணீருக்கும் வஞ்சான் பாரு ஆப்பு!

தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த மகராசி, நல்லா இருப்பா! என்று கிராமப்புறங்களில் கூறக் கேட்டிருப்போம். ஆனால் தற்போது தவிக்கின்ற வாயிக்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலையை உருவாக்கும் போல் இருக்கிறது.


மக்களுக்கு வேண்டிய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை அறியாதவர் யாருமில்லை. அப்படியிருக்க ஒரு குடிநீர் திட்டத்தை உருவாக்கிவிட்டு, அதன் பயனை மக்கள் அனுபவிக்க விடாமல் தனியாரிடம் கொடுக்கும் நிலையை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழகத்தில் சிறியது, பெரியதுமாக 74546 குடிநீர் திட்டங்களை அமைத்து உள்ளது. இவற்றின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த வாரியம் 1995ம் ஆண்டு திட்டத்தால் பயனடையும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூறியது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பு பணிகளை செய்யமுடியாமல் திண்டாடின. இதனால் மீண்டும் பராமரிப்பு பணிகளை வாரியமே ஏற்றுக் கொண்டது.உலகமயம், தராளமயம், தனியார்மயக் கொள்கைகள் நாட்டில் சமூக அமைதியை குலைத்து வருகின்றன. இதன் தாக்கம் படிப்படியாக அனைத்து துறைகளையும் ஆட்கொண்டு விட்டது. இப்போது குடிநீர் வாரியமும் அந்தப்பட்டியலில் சேர்ந்து விட்டது.


முதற்கட்டமாக டெண்டர் மூலம் 150 திட்டங்கள் தனியார் பராமரிப்புக்கு விடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 500 திட்டங்களை கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்விளைவு என்னவாக இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலதான்.உதாரணமாக டெண்டரில் ஒரு திட்டத்தை பராமரிக்க 20 பேர் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் பம்பிங் செய்ய வேண்டும் என்று இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். ஒப்பந்தக்காரர்கள் என்ன 5 பேரை நியமித்து 16மணி நேரம் மட்டுமே பம்பிங் செய்கின்றனர். இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீர் சரிவர கிடைக்காமல் போகும்.


கோவை மாவட்டத்தில் நேரடியாக ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன. ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி 440பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 160பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மீதம் உள்ள 280 தொழிலாளர்களுக்கான சம்பளம் பணம் முறைகேடாக ஒப்பந்தகாரர்கள் பெற்றுக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது குழந்தைக்கும் தெரியும்.


இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போகும். தண்ணீர் தட்டுப்பாடு உருவாகும். இந்த டெண்டர் எடுத்தவர்களின் பெரும்பாலனோர் ஆளும்கட்சி பிரமுகர்கள் என்பதிலிருந்தே திட்டம் எதற்காக என்பதும் வெட்டவெளிச்சமாகிறது.இருக்கும்போதே கொடுக்க மனும் வராத நமது சமூகத்தில், தண்ணீர் தட்டுப்பாட்டில் உள்ளவர்கள் தவித்த வாயிக்கு தண்ணீர் கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

No comments: