பழைய காலத்தில் நடத் தப்பட்ட சத்தியவான் சாவித்ரி தெருக் கூத்து நாடகத்தில் எமன் என்ட்ரி ஆவதற்கு பின் னிரவு ஆகிவிடும். பெரும் பாலான மக்கள் தூங்கி வழிந் துக் கொண்டிருப்பார்கள். எமன் வருகையை முன்னறி விக்கவும், தூங்கும் மக்களை எழுப்பி விடவும் கட்டியங் காரன் பெரும் குரலெடுத்து அண்டம் நடுநடுங்க, கண் டம் கிடுகிடுக்க.... ராஜா வந்தாரே... எமதர்ம ராஜா வந்தாரே... என்று பாடுவார். அதைத் தொடர்ந்து அட்டை எருமை சிரித்தபடி மாடு மீது அமர்ந்து, பாசக்க யிற்றை வீசியபடி பயங் கரமாக எமதர்ம ராஜா பிரசன்னமாவார்.
இப்போது அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்திய வருகையையொட்டி நடை பெறுகிற அலப்பறைகளும், ஆர்ப்பரிப்பு களும் பழைய சத்தியவான் சாவித்ரி நாடக எம தர்பாரையே நினைவுபடுத்துகின்றன. மத்தியில் ஆளும் மன்மோகன்சிங் அரசு பயந்து நடுங்கியபடி பணிவிடைக்கான ஏற் பாடுகளை செய்து வருகிறது. உலக அதி சயமே நடைபெற போவதுபோல ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றன. வெள்ளை மாளி கையிலிருந்து எழுந்து கறுப்பு இயேசுவே வர விருப்பது போல சில உள்ளூர் தலைவர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.
ஒபாமா வருகையையொட்டி 40 விமா னங்களும், 6 குண்டு துளைக்காத கார்களும் வரவுள்ளனவாம். இந்தியாவில் நவம்பர் 6 முதல் ஒபாமா சுற்றுப் பயணம் செய்யும்போது 6 குண்டு துளைக்காத கார்களும் கூடவே செல்லுமாம். ஒரு ராணுவ விமானம் உள் ளிட்ட 40 விமானங்களும் வானில் வட்ட மடித்தபடியே இருக்குமாம். வெள்ளை மாளி கையோடு அவர் எப்போதும் தொடர்பில் இருக்குமாறு தனி தொலைத் தொடர்பு கட் டமைப்பும் உருவாக்கப்படுமாம்.
ஒபாமா மற்றும் அவரோடு வரும் பரி வாரத்திற்காக தாஜ்மகால் ஓட்டல் முழுமை யும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டல் ஊழியர்கள் கூட கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுப்பப்படுவார்களாம். தில்லி மற்றும் மும்பையில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு சேட்டிலைட் மூலம் இரு நக ரங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படு மாம்.
பாதுகாப்பு பணியில் அமெரிக்கப் படை யினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களோடு சேர்ந்து அமெரிக்கா விலிருந்து மோப்ப சக்தி மிகுந்த 30 நாய் களும் வருகைதர உள்ளன. நமது நாட்டி லுள்ள மோப்ப சக்திமிகுந்த நாய்களைக் கூட அவர்கள் நம்ப தயாராக இல்லை.
ஒபாமா தனது குடும்பத்தி னரோடு தாஜ் மகாலை சுற்றிப் பார்க்கவுள்ளார். இதற்காக இப்போதே கிட்டத்தட்ட தாஜ் மகால் அமெரிக்க போலீ சாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது.
இந்தியாவிற்கு எத்த னையோ உலக நாடுகளின் தலைவர்கள் வருகிறார்கள்... போகிறார்கள்... உடன்பாடு களில் கையெழுத்திடுகிறார்கள். ஆனால், அமெரிக்க ஜனாதிபதி வந்தால் மட்டும் பழைய பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது எலிசபெத் மகாராணி வந்தால் என்னென்ன கூத்துக்கள் நடக்குமோ அத்தனையும் நடக் கிறது. முன்பொருமுறை அமெரிக்க ஜனாதி பதியாக இருந்த கிளிண்டன் இந்தியா வந் தார். அவரோடு அவரது மாமியாரும் வந் தார். மாமியார் தனது செல்ல நாய்க் குட்டி யையும் சேர்த்து அழைத்து வந்தார். அந்த நாய் குட்டிக்கு மட்டும் 8 போலீசார் இரவு பகலாக காவல்காத்தனர். இப்போது ஒபாமா வின் மாமியாரோ அல்லது அவர் வளர்க்கும் நாய்க் குட்டியோ வந்தால் போலீசார் பாடு திண்டாட்டம்தான்.
ஒபாமா ஒன்றும் இந்தியாவை சுற்றிப் பார்க்கவரவில்லை. இந்தியப் பொருளாதா ரத்தை சுற்றி வளைக்கத்தான் வருகிறார். சில் லறை வர்த்தகத்தை முற்றாக திறந்துவிட ஒபாமா வருகை உதவும் என்று வால்மார்ட் நிறுவனம் இப்போதே வாயைப் பிளக்கிறது. வங்கி, இன்சூரன் துறைகளில் அந்நிய முதலீடு அதிகரிப்பது குறித்து விவாதிக்கப் படும் என்று நாக்கை நீட்டிக் காத்துக் கொண்டிருக்கின்றன அமெரிக்க நிதி நிறு வனங்கள்.
இந்த நயவஞ்சகத்தை மறைக்கத்தான் வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து வண்டி வண் டியாக எழுதுகின்றன சில ஏடுகள். சிலரோ கறுப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவின் வரு கையை கம்யூனிட்டுகள் எதிர்க்கலாமா என்று கேட்கின்றனர். கறுப்பின மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்காக ஒப்பற்ற தலைவன் நெல்சன் மண்டேலா வெஞ் சிறையில் வாடியபோது அவருக்கு ஆதர வாக தலைநகர் தில்லி துவங்கி குக்கிராமங் கள் வரை போராடியவர்கள் கம்யூனிட்டுகள். ஒபாமா கறுப்பா? வெள்ளையா என்பதல்ல இப்போதைய பிரச்சனை. ஒபாமா வருகை யின் உள்நோக்கம் என்ன என்பதே கேள்வி? சுரண்டலுக்கு நிறமில்லை.
- மதுக்கூர் இராமலிங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment