அரசு வீடு, மனைகள் ஒதுக்கீடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தர விட வேண்டுமென மார்க்சிட் கம்யூனிட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான வீடுகள், மனை கள் ஆகியவற்றை அரசு விருப்புரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அரசு விருப்புரிமை அடிப்படையில் ஒதுக்கீடு பெற்றவர்களின் பட்டி யலும் வெளியாகியுள்ளன.
அரசு விருப்புரிமை அடிப்படையில் ஒதுக்கீடு பெற்றவர்களில் பலர் வசதி படைத்தவர்களாக இருப்பதும், ஏற்கெனவே வீடுகள், மனைகள் உள்ளவர்களாகவும் இருப்பதும் தெரிய வந்துள்ளது. வீடு கள் ஒதுக்கீட்டை பெற்றுள்ளவர்களின் தகுதி மற்றும் வீடுகள், மனை களுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ள விலைகள் குறித்தும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து முழு உண்மையையும் கண்டறிய முறையான விசாரணை தேவை என மார்க்சிட் கட்சி கருதுகிறது.
வீட்டுவசதி வாரியத்தின் வீடுகள், மனைகள் ஒதுக்கீட்டில் முறை கேடு நடந்துள்ளது பற்றி குறிப்பிடுகிறபோது, வாரியத்தின் வீடுகளை வாடகைக்கு விடுவதையும் இத்துடன் முதல்வர் இணைப்பது சரியான அணுகுமுறையல்ல. எனவே, வீட்டுவசதி வாரியத்தின் வீடுகள், மனை கள் எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத் தரவிட வேண்டும் என மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் மாநிலச் செயற்குழு, தமிழக அரசை வலியுறுத்துகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மார்க்சிஸ்ட் கட்சியிலும் நடந்துள்ள அநியாயம் பற்றி
தெரியுமா தோழர்? பொதுத்தொகுதியில் தலித் பெண்
வேட்பாளரை நிற்க வைக்கிறோம் என்று கடந்த முறை
பெருமை பேசி விட்டு, இம்முறை அந்த தொகுதியையே
கைகழுவி விட்ட அவலம் தெரியுமா? அடிபட்டு, உதைபட்டு,
கைதாகி சிறை சென்றதுதான் அவர் செய்த தவறா?
ஆனந்த விகடன், குமுதம் போன்ற முதலாளித்துவ
பத்திரிக்கைகளே பாராட்டும் வகையில் அவரது பணி
அமைந்திருந்ததுதான் பாவமா?
கடந்த முறை வாய்ப்பு கிடைக்காமல் போனவர்களின்
கோஷ்டி அரசியலுக்கு மாநிலக்குழுவும் இரையாகி உள்ள
கொடுமையை எங்கு சொல்வது? ஜாதிய உணர்வோடு
செயல்பட்ட சிலரால் கட்சியின் உண்மையான தொண்டர்கள்
வெறுப்பின் உச்சக்கட்டத்தில் இருப்பதை கட்சி உணருமா?
அல்லது புகழ்ச்சிக்கு மயங்கிப்போய் பொய்களுக்கு துணை
போன பொறுப்பாளர்களின் தவறுகளை தட்டிக் கொடுக்குமா?
இதை பிரசுரிக்காவிட்டாலும் பரவாயில்லை. கட்சிக்குள்
நடக்கும் அராஜகத்தை சொல்லவே எழுதியுள்ளேன்.
வெளிப்படையாக என்னால் பேச முடியும். ஆனால்
தவறிழைப்பவர்களை அம்பலப்படுத்தவாவது கட்சியில்
இருக்க வேண்டும்
Post a Comment