சென்னை வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மாநகராட்சி; சுகாதாரத்தில் முன்னிலையில் உள்ளது என்று ஆட்சியாளர்கள் கூறினாலும் கழிப்பிடம் தேடி மக்கள் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சொல்வதை செய்வோம்; சொல்லாததையும் செய்வோம் என்று தமிழக முதலமைச்சர் மூச்சுக்கு முன்னூறு முறை உதிர்த்தாலும், தளபதியின் ஆலோசனைக்கிணங்க இந்த அளப்பரிய சாதனையை மாநகராட்சி செய்கிறது என்று மேயர் உணர்ச்சி பொங்க கூறினாலும், பொது சுகாதாரத்தில் மாநகராட்சி பின்தங்கியே உள்ளது. இதுதான் நடைமுறை அனுபவம் உணர்த்துகிறது.
சென்னை மாநகரில் இலவச பொதுக்கழிப்பிடத்தை காண்பதே அரிதாக உள்ளது. ஆங்காங்கே ஒன்றிரண்டு பொதுக்கழிப்பிடங்கள் இருந்தாலும் அது ஆளும் கட்சியினரின் வசூல் வேட்டைக்கே பயன்படுகிறது. பொதுச்சுகாதாரத்தை பேணிகாக்க வேண்டிய மாநகராட்சி, மக்களின் நலனில், குறிப்பாக குடிசைபகுதி மக்களின் நலனில் அக்கறை இன்றி உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக சில கழிப்பிடங்கள் சாட்சிகளாக உள்ளன.
முதலமைச்சர் தொகுதியே இந்த லட்சணம் என்றால்?
சேப்பாக்கம் தொகுதி. முதலமைச்சரின் தொகுதி. பிற தொகுதிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய தொகுதி. நிலைமை என்ன? 81வது வட்டம் சிந்தாதரிப்பேட்டை பம்பிங் டேசன் சாலை, ரிச்சி தெருவில் 300குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகம் எதிரில் நவீன பொதுக்கழிப்பிடம் உள்ளது. பெயர்தான் நவீனமே தவிர, கழிப்பிடம் கட்டி பல வருடங்களாகிறது. அந்த கழிப்பிடத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி பல மாதங்களாகிறது.
கழிப்பிடத்தை பராமரிக்க ஊழியர்கள் இல்லை. உடைந்த கழிவு நீர் குழாய்களை சரி செய்ய மாநகராட்சிக்கு மனம் இல்லை. கழிப்பிடம் முற்றிலும் நாசமாகி விட்டது. ஆகவே, கழிப்பிடம் பூட்டியே கிடக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், பூட்டியே கிடக்கும் அந்த கழிப்பிடத்தின் பெயர் பலகை மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது.
துணை முதலமைச்சர் திறந்தும் மூடியே கிடக்கும் கழிப்பிடம்
ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 107வது வட்டம், நுங்கம்பாக்கம் மைதானத்தில் 5லட்சம் ரூபாய் செலவில் ஒரு பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. அதனை துணை முதலமைச்சர் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்தும் வைத்தார். அன்றிலிருந்து அந்த கழிப்பிடத்தை பாதுகாப்பாக மாநகராட்சி பூட்டி வைத்துள்ளது.
இது தெரியாமல், மைதானத்திற்கு விளையாட வருகிறவர்கள் போக இடமின்றி கழிப்பிடத்தை உடைத்து பயன்படுத்தினர். பராமரிப்பு இல்லாததால் பயனற்று கிடக்கும் அந்த கழிப்பிடத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் இளைஞர்கள் பயனடைவார்கள். பெண்கள் கழிப்பிடத்தை யாரும் உடைக்கவில்லை என்பதுதான் இந்த கழிப்பிடத்தின் சிறப்பு.
பூச்சி கடித்தால் என்ன?
139வது வட்டம் ஜோதியம்மாள் நகரில் 75விழுக்காடு குடும்பங்களுக்கு கழிப்பிடம் இல்லை. இவர்களுக்காக 2002-2003ம் நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. அந்த கழிப்பிடமும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதுகாப்பாக மூடியே வைக்கப்பட்டுள்ளது.
கழிப்பிட வசதி இல்லாத மக்கள், அடையாற்று கரையும், புதர்மண்டிய மைதானமும் கழிப்பிடமாக இருந்து வருகிறது. அங்கு செல்லும் மக்கள் அவ்வப்போது பூச்சிகடிகளுக்கு உள்ளாகின்றனர்.
நடவடிக்கை?
இந்த கழிப்பிடங்களை திறக்கக்கோரி அப்பகுதி மக்கள் புகார் மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமலேயே உள்ளனர். பத்திரிகைகளில் அவ்வப்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொகுதி குறித்து செய்தி வெளியிட்டால், மாநகராட்சி அவசர அவசரமாக நடவடிக்கை எடுப்பது போன்று பாவலா காட்டுகிறது. இதுதான் சிறப்பாக செயல்படும் மாநகராட்சியின் லட்சனமாக உள்ளது.
ஒருவேளை அந்த பெரியவர்கள் அங்கு செல்லாததால் பூட்டி பாதுகாப்பாக வைத்துள்ளார்களோ? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. மனிதனுக்கு மலச்சிக்கல் வந்தால் மருத்துவரிடம் செல்லலாம். கழிப்பிடத்திற்கு மலச்சிக்கல் வந்தால் மாநகராட்சிதானே சரி செய்ய வேண்டும்.
Friday, October 22, 2010
ஊழியர்களையும் கழிவாக கருதுகிறதோ?
சென்னை நகரத்தில் உள்ள பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்து, மக்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் அளப்பரிய செயலை செய்து வருபவர்கள் கழிவு நீர் அகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள். இவர்களை அரசு வெறும் கழிவாகவே நினைக்கிறதோ? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தில் சுமார் 800 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறை கூடாது என சட்டம் இருந்தாலும் நடைமுறையில் அமலாகாத நிலைதான் உள்ளது.
மழை, வெயில் என பொருட்படுத்தாமல் குடிநீர் விநியோகம், குடிநீர் பாராமரிப்பு, குடிநீர் இணைப்பு, குடிநீர் பழுதுபார்ப்பு, பாதாள சாக்கடை கழிவு நீர் அடைப்புகளை சுத்தம் செய்தல், பராமரித்தல் என கடுமையாக உழைக்கின்றனர். இதனால் இளந்தொழிலாளர்கள் உடல் தோற்றம் மாறி, பல்வேறு விதமான நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் உள்ளாகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு வெறும் 130ரூபாய் மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது.
இந்த நிலை மாறுமா? இவர்களையும் தொழிலாளர்களாக நினைத்து அரசு போன வழங்குமா? இந்த தொழிலாளர்களுக்கு 12லட்சம் ரூபாய் செலவிட அரசு தயங்குவது ஏன்?
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தில் சுமார் 800 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறை கூடாது என சட்டம் இருந்தாலும் நடைமுறையில் அமலாகாத நிலைதான் உள்ளது.
மழை, வெயில் என பொருட்படுத்தாமல் குடிநீர் விநியோகம், குடிநீர் பாராமரிப்பு, குடிநீர் இணைப்பு, குடிநீர் பழுதுபார்ப்பு, பாதாள சாக்கடை கழிவு நீர் அடைப்புகளை சுத்தம் செய்தல், பராமரித்தல் என கடுமையாக உழைக்கின்றனர். இதனால் இளந்தொழிலாளர்கள் உடல் தோற்றம் மாறி, பல்வேறு விதமான நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் உள்ளாகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு வெறும் 130ரூபாய் மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு அடையாள அட்டை, பாதுகாப்பு சாதனங்கள், சம்பத்துடன் கூடிய விடுப்பு, பி.எப், இஎஸ்ஐ, சம்பளச்சீட்டு என எந்த சட்ட உரிமையையும் நிர்வாகம் வழங்காமல் உள்ளது; வேலை செய்வதற்கான எந்த அத்தாட்சியும் இல்லாமல், தொழிலாளர் என்ற சட்ட அங்கீகாரம் கூட இன்றி உள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நாளொன்றுக்கு 300ரூபாய் கூலி வழங்க வேண்டும். 8மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும். பண்டிகை, அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். சம்பளச்சீட்டு வழங்க வேண்டும்.
இலவச மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். சீருடை, பணி செய்வதற்கான உபகரணங்களை வழங்க வேண்டும். பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும். இஎஸ்ஐ வசதி செய்து கொடுக்க வேண்டும். அனைவருக்கும் போன, கருணை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடினாலும் அரசு பாராபட்சமாகவே நடத்துகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி அரசுத்துறை நிறுவனமான மின்சார வாரியம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 1500 ரூபாய் போன வழங்கி உள்ளது. அந்த அளவிற்கு கூட இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை.
Subscribe to:
Posts (Atom)