Pages

Monday, March 15, 2010

உணவுப்படி உயருமா?

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறையின் கீழ் 1206 பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.


இந்த விடுதிகள் கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி காணப்படுகின்றன.இவற்றை சரி செய்ய வேண்டிய அதிகாரிகளும், அரசு எந்திரமும் தூங்கி வழிகிறது.


இந்த கடுமையான விலைவாசி உயர்விலும் பள்ளி மாணவனுக்கு நாளொன்றுக்கு 15ரூபாயும், கல்லூரி மாணவனுக்கு 18 ரூபாயும் உணவுப்படியாக கொடுக்கிறது. இந்த தொகை மாணவர்களின் உணவு தேவையில் 25சதவீதத்தை கூட பூர்த்தி செய்யாயது என்பது சாதாரணமாக தெரிகிறது.


ஆகவே, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப விடுதி மாணவர்களுக்கான உணவுப்படியை உயர்த்த வேண்டும். தரமான ஊட்டச்சத்துள்ள உணவினை உணவுப்பட்டியல்படி வழங்க வேண்டும். விடுதிகளில் சுத்தமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விடுதியில் இடம் கிடைக்கும் வகையில் புதிய விடுதிகளை உருவாக்க வேண்டும் என்று மாணவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமையல்லவா?

 
முதுநிலை மாணவர்களுக்கு விடுதியில் இடம் கொடுக்க நிலை நீடிப்பது எப்படி முறையாகும்? இன்னும் கொடுமை என்னவெனில் பல விடுதிகளில் சமையலர், உதவியாளர் இடங்கள் காலியாக உள்ளது. இதனை செய்யாமல் எப்படி மாணவர்களுக்கு நல்ல உணவு கிடைக்கும். படிப்பதற்கான சூழ்நிலை எப்படி உருவாகும்.

No comments: