Pages

Monday, March 15, 2010

சாதிய உணர்வோடு செயல்படும் ஓவியக்கல்லூரி முதல்வர்

சென்னை சென்ட்ரல் அருகே உள்ள அரசு கவின்கலைக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இங்கு 15பேர் மட்டுமே உள்ளனர். இதனால் முன்னாள் மாணவர்கள் இலவசமாக வகுப்பெடுக்கின்றனர்.


இக்கல்லூரியில் முதுநிலை பயிலும் மாணவர் சசிக்குமார், திருக்குறளை சுடுமண் சிற்பமாக வடித்து உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் வைக்க திட்டமிட்டார். இதற்காக கல்லூரி முதல்வர் மனோகரனை அணுகியுள்ளார். கல்லூரி நிதியில் இருந்து பணம் வழங்க மறுத்த அவர், சொந்த செலவில் மூலப்பொருட்களை வாங்கிக் கொள்வதோடு, கல்லூரி வளாகத்திலேயே சூளையை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கினார். இச்செலவினங்களுக்கான தொகையை பின்னர் கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார்.



இதனையடுத்து சக மாணவர்களின் உதவியோடு சுடுமண் சிற்பத்தை தயாரிக்கும் பணியில் சசிக்குமார் ஈடுபட்டார். 1330 குறளுக்கான சிற்பத்தையும் செய்து கொண்டே அவற்றை சூளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவ்வப்போது கல்லூரி முதல்வரை சந்தித்து சசிக்குமார் பணம் கேட்டு வந்துள்ளார்.



இச்சூழ்நிலையில் சில விஷமிகள் மனோகரனின் காரை சேதப்படுத்தியுள்ளனர். அதனை சசிக்குமார் செய்ததாகவும், அவரை முன்னாள் மாணவர்கள் யஷ்வந்திரன், கமலஹாசன் ஆகியோர் தூண்டிவிட்டுள்ளார் என்று மனோகரன் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.


இதனையறிந்த சசிக்குமார், கமலஹாசன் ஆகியோர் தலைமறைவாகினர். யஷ்வந்திரனையும், அவரது தம்பியையும் அடித்து இழுத்து சென்ற போலீசார், பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து சாதி பெயரை கூறி திட்டியதோடு பூட்ஸ் காலால் மிதித்து சித்தரவதை செய்துள்ளனர். மறுநாள் சிறையில் அடைத்துள்ளனர்.


இந்த சம்பவங்களின் விளைவாக சசிக்குமார் செய்து வைத்திருந்த 300க்கும் மேற்பட்ட சிற்பங்கள் சூளையிடாததால் உடைந்துவிட்டன. ஒரு சிற்பம் தயாரிக்க குறைந்தது 3மணி நேரம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


“யஷ்வந்திரன், கமலஹாசன் ஆகியோர் தலித் மாணவர்கள் என்பதற்காகவும், சில அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கூறியதற்காகவும் காழ்ப்புணர்ச்சியோடு மனோகரன் பொய் புகார் கொடுத்துள்ளார்” என்று மாணவர்கள் கூறினர்.

 
இதனைக் கண்டித்து மார்ச்-9 அன்று எழும்பூரில் மாணவர்கள் கண்டனக் கூட்டம் நடத்தினர். இதில், சாதிய உணர்வோடு செயல்படும் கல்லூரி முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர்

2 comments:

- யெஸ்.பாலபாரதி said...

படிக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.. சில சிற்பங்களின் படங்களையாவது இங்கே வெளியிட்டு இருக்கலாம்.

உங்களுடன் said...

photo vachitan