ரெண்டு நாளைக்கு ஒரு முறையாவது
குடிநீர் கிடைக்குமா?
பல்லாவரம் மக்களின் ஏக்கம்
பல்லாவரம் நகராட்சியில் உள்ள மக்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு நாளைக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டுமென்று அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லாவரம் நகராட்சியில் உள்ள சுமார் 1.75லட்சம் மக்க ளுக்கு நாள்தோறும் 110 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. நகராட்சிக்கு பாலாற்றில் இருந்து 40-50லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்து வந்தது. கோடைக் காலம் துவங்கியதிலிருந்து நீரின் அளவு குறைந்து விட்டது. இதனால் இங்குள்ள வர்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன்காரணமாக போதிய குடிநீர் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.இது தொடர்பாக 40வது வார்டு கவுன்சிலர் எஸ்.நரசிம்மனிடம் கேட்டபோது, நகராட்சி சார்பில் பாலாற்றில் கூடுதலாக கிணறுகளை அமைக்க வேண்டும். தற்போதுள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க பயன்படுத்தும் மோட்டாருக்கு தேவையான மின்சாரம் கிடைக்கவில்லை. எனவே, அங்கு ஜெனரேட்டர்களை பொருத்த வேண்டும். எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment