நம்மில் பலர் சம்பள உயர்வு வேண்டுமென்று கேட்போம். அதற்காக போராடுவோம். அதனை பெற அனைத்து தகிடுதத்தங்களையும் செய்வோம். அதுவே ஒரு தொழிலாளி கூலி உயர்வு கோரினால் நமக்கு பொத்துக் கொண்டு கோவம் வரும். அதுப்போலத்தான் ஆட்டோ ஓட்டுநர்களின் விவகாரமும்.
சென்னை நகரில் இயங்கக் கூடிய ஆட்டோக்களில் மீட்டர் போட்டு ஓட்டுகிறோம். மீட்டர் போட்டு ஓட்டுவதற்கு ஏற்ப நியாயமான கட்டணத்தை அரசு நிர்ணயிக்குமா? என்று ஒரு ஆட்டோ ஓட்டுநர் கேட்டால் என்ன பதில் சொல்ல ! !
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 70ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன (இவற்றில் வெறும் 7ஆயிரம் ஆட்டோக்களே சிஐடியு சங்கத்தில் உள்ளது). இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி, ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் பொறுப்பு மாநில அரசிடமே உள்ளது. ஆனால், மாநில அரசு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏற்புடைய கட்டணத்தை நிர்ண யிக்க மறுக்கிறது.
ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியான போராட்டத்தால், பேரா. மகாலிங்கம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரைகளை கடந்த திமுக அரசு அமல்படுத்தவில்லை.
2007ம் ஆண்டு குறைந்தபட்ச கட்ட ணம் (2கிமீ) 14 ரூபாயும், அடுத் தடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 6 ரூபாய் என நிர்ணயித்தது. இதனை ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
2007ம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 45 ரூபாய்க்கும், எரிவாயு ஒரு கிலோ லிட்டர் 27 ரூபாய்க்கும் விற்றது. தற்போது, இது 71 ரூபாய், 43 ரூபாய் என உயர்ந்துள்ளது. இந்த விலையா னது மாத மாதம் உயர்ந்து கொண்டே செல்கிறது.
மாநகரத்தின் வாகனப் பெருக் கம், போக்குவரத்து நெரிசல், சிக்னல் பெருக்கம் ஆகியவற் றின் காரணமாக ஆட்டோக் களை இயக்குவது சிரமமாக உள்ளது. வாகனத்தை மெது வாக இயக்குவதால் எரிபொருள் அதிகம் செலவாகிறது. நான்கு சவாரி செய்வதற்கு பதிலாக 2 சவாரிதான் செய்ய முடிகிறது. வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு உள்ளது போல் ஆட்டோ ஓட்டு நர்களுக்கு எந்த சட்டச் சலுகையும் இல்லை. விலைவாசி உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு அதிமுக அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். குறைந்தபட்ச கட்டணமாக 30 ரூபாயும், அடுத்தடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 15 ரூபாயும் நிர்ணயிக்க வேண்டுமென்று ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உச்சநீதிமன்றம் தீர்ப்புப்படி, சென்னை நகரில் கே ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 7 கே நிரப்பும் மையங்கள் மட்டுமே உள்ளன. இதனால் ஆட்டோக்களில் கே கிட் பொருத்தப்பட்டு இருந்தாலும், பெட்ரோல் மூலமே இயக்குகின்றனர் என்ற நடைமுறை சிக்கலை அரசு புரிந்து கொண்டு கட்டணத்தை மாற்ற வேண்டும், என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்ளேனத்தின் பொதுச் செயலாளர் எம்.எ.ராஜேந்திரன் கூறுகிறார்.
தமிழக அரசு சென்னை நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, ஓட்டுநர்களும், பொதுமக்களும் ஒப்புக் கொள்ளும் வகையில் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைத் தால், மீட்டர் கட்டணத்தை வசூலிக்க தயாராக இருக்கிறோம் என்றும் எம்.எ.ராஜேந்திரன் கூறினார்.
அரசு என்ன செய்யப் போகிறது ? நாம் என்ன செய்யப்போகிறோம் ?
No comments:
Post a Comment