Sunday, December 23, 2007
பட்டா
சென்னை, 18 டிச. 2007
நீர்வரத்தில்லாத நீர் நிலைப் பகுதிகளில் குடியிருக் கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரி கொட்டும் மழையில் குடையைப் பிடித்துக் கொண்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் அண்மையில் சென்னையில் பேரணி நடத்தினர்.
சென்னை புறநகர் பகுதி யில் உள்ள கொரட்டூர் ஏரி, திருவேற்காடு ஏரி, பல்லாவரம் பெரிய ஏரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது.ஏரி அதைச் சார்ந்த மேட்டு பகுதிகளில் குடியிருக்கும் மக் கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசிக்கின்றனர். அவர்களுக்கு மின் இணைப்பு, சாலை, ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை அரசு வழங்கியுள்ளது.
மேற்கண்ட ஏரிகள் குடிநீ ருக்காக இதுவரை பயன்படுத் தப்படவில்லை. இந்த ஏரிகளின் மண் வளத்தை பரிசோதித்ததில் குடிநீருக்கு பயன்படுத்த முடியாது என்பது நிருபனமாகி உள்ளது.இந்நிலையில் இப்பகுதி மக்களிடம் பேசியதிலிருந்து...."ஏரிப்பகுதியில் வசிக்கின்ற நாங்கள் யாரும் நிலங்களை ஆக்கிரமிக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருப தாயிரம் ரூபாய் கொடுத்து அரசியல்வாதிகளிடமிருந்து வாங்கியுள்ளோம். இதற்கான பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத ஆவணகங்கள் எங்களிடம் உள்ளது.
எங்களை அகற்றுவதற்கு முன்பு நிலத்தை விற்றவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரடு முரடாகக் கிடந்த இந் தப் பகுதியை காலம் முழுவ தும் நாங்கள் உழைத்து கிடைத்தவற்றை கொண்டு மேம்படுத்தி வீடு கட்டியுள்ளோம்.நீர்நிலைப் பகுதிகளில் தற்போது குடியிருக்கும் பகுதியைத் தவிர்த்து எஞ்சி யுள்ள நீர் பிடிப்புப் பகுதிக ளில், இனி எவ்வித ஆக்கிரமிப் பும் நடைபெறாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து சிபிஎம் தலைவர்களிடம் பேசியதிலிருந்து.....நீர்நிலைப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை எவ்வித பாராபட்சமுமின்றி முறையாக பதிவு செய்ய வேண்டும். இனிமேலும் எந்த ஒரு குடியிருப்பும் நீர்நிலைப் பகுதியில் அமையாமல் தடுப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுப்பதுடன், மேற்கண்ட அரசுத்துறை அதிகாரிகளும் உடந்தை என கருதப் பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியிருப்புகளுக்கு இடை யில் காலி இடம் இருக்குமேயானால் வட்டாட்சியர் மூலம் அதனை கையகப்படுத்தி பள்ளி, மருத்துவமனை, விளை யாட்டு திடல் போன்ற பொது வான பயன்பாட்டிற்கு பயன்ப டுத்த வேண்டும் என்றனர்.அரசு விரைவில் நிலத்தை வகைமாற்றம் செய்து பட்டா வழங்குமா?
வரலாறான புறக்கணிப்பு
வரலாறான புறக்கணிப்பு