தோழர் ஜீவா நூற்றாண்டு நிகழ்ச்சிகளையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தாம்பரம் பகுதி சார்பில் ஜூலை 3 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தமுஎச பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் பேசியதிலிருந்து:
நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, உள்நாட்டு மீனவர்கள் என ஒவ்வொரு பகுதி மீனவர்களின் கலாச்சாரம் வெவ் வேறாக உள்ளது. நெய்தல் நிலத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை மைகளை சமவெளிப்பகுதியில் உள்ள மக்களால் புரிந்து கொள்ள முடியாததாக உள்ளது.கடலில் மீன்பிடிக்க படகில் செல்லும் மீனவன், மோட்டார் சத்தத்தில் சத்தமாகவே பேசி பழக்கப்பட்டவன். மற்றவர்களிடத்திலும் அப்படியேதான் பேசுவான். ஆனால், சமவெளியில் உள்ளவர்கள் அவர்களை முரடர்கள் என்கிறார்கள்.
சென்னை நகரில் தங்க வீடில்லாமல் சாலையோரத்தில் வசிக்கும் மக்க ளின் வாழ்க்கை நிலைமை எவ்வளவு கொடூரமானது. இவர்களின சமூக உணர்வு எந்த மட்டத்தில் இருக்கும். குடிசைப் பகுதிகளில் கழிப்பிடம் கூட கிடையாது. பொதுக் கழிப்பிடத்தில் பார்த்தால் உள்ளே ஒருத்தர் இருப்பார். வெளியில் கொஞ்சம்பேர் வரிசையில் நிற்பார்கள். உள்ளே உள்ளவரின் மனநிலையும், வெளியே நிற்பவரின் மனநிலையும் எப்படிபட்டதாக இருக் கும்? அவர்களுக்கு சமூகத்தின் மீது என்ன சிந்தனை உருவாகும்?
தமிழகத்தின் மையப் பகுதியான மதுரையில் சவுராஷ்டிரா மக்கள் உள்ளனர். அவர்களின் பேச்சுவடிவம் வேறு. தமிழக எல்லையில் உள்ள மாவட்டங்களில் கேரளம், கர்நாடகம், ஆந்திரா பகுதி பண்பாடு கலந்துள் ளது. குமரியில் தமிழில், தென் கேரளத்தின் பண்பாடும் கோவையில் வட கேரளத்தின் பண்பாடும் கலந்துள்ளது. இப்படி பண்பாட்டுக் கலப்பு உள்ளது. சாம்போஜிராவ் கண்டுபிடித்த குழம்பு சாம்பார். அது ஊருக்கு ஊர் வேறுபடுகிறது.இப்படி பன்முகக் கலப்பு தமிழகத்தில் உள்ளது. அது திருமணம் உள் ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் வெளிப்படுகிறது. இப்படி உள்ள வற்றையெல்லாம் இணைக்கும் பாலமாக மொழி உள்ளது.
மொழியிலும் உச்சரிப்புகள் வேறுபடுகின்றன. நெல்லை சைவப் பிள்ளை மார்கள் பேசுவதை நெல்லைத்தமிழ் என்று சிலர் சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள். அது தவறு. வா-வாங்க இரண்டுக்கும் நடுவில் வாரும் என்ற வார்த்தையை பயன்படுத்து கின்றனர். இதுவே நெல்லைத்தமிழ். அங்கேயும் தலித் மக்களின் மொழிநடை வேறாக உள்ளது. இப்படி பல முரண்பாடுகள் சமூகத்தில் உள்ளது.
பாபர் மசூதி இடிப்பையொட்டி ஒவ்வொரு ஆண் டும் டிசம்பர் மாதத்தில் முஸ்லிலீம் சமுதாய மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறார் கள். சச்சார் கமிட்டியின் அறிக்கையில் கூறியுள்ளபடி மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் வேலைவாய்ப்பு இல்லை.ஆனால் அவர்களின் மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது சிறையில் உள்ளவர்களின் எண் ணிக்கை அதிகமாக உள்ளது. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு வருகிறார்கள். மீண்டும் சிறைக்கு கொண்டு செல்கிறார்கள். இப்படியாக பல ஆண்டுகளாகப் பல இளைஞர்கள் சிறையிலேயே உள்ளனர்.
தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான நாடோடி கள், நரிக்குறவர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை பயணத்திலேயே முடிந்து விடுகிறது. நம் வீட்டிற்குள் முன்பின் தெரியாதவர் வந்தால் கேள்வி கேட்கிறோம்.இந்த மக்களை பற்றி ஒருபோதும் யாரும் கேள்வி எழுப்பியது கிடையாது.பெண்களுக்கு வீட்டில் உள்ள சேரியாக அடுப்படி கள் உள்ளன. பெண்கள் சமூகம் பற்றி ஆண்களுக் குத் தெரிய வில்லை. தற்போது பெண்கள் பிரச்சனைகளைப் பற்றி எழுதும் பெண் எழுத்தாளர்களில் கூட பலர் ஆண்களின் சிந்தனையோடுதான் எழுகின் றனர்.
தலித் மக்களின் வாழ்க்கை நிலைமையை சமூகம் கண்டு கொள்ள மறுக் கிறது. அருந்ததியர் மக்கள் காலை 5மணிக்கு வேலைக்கு சென்று பீ அள்ளு கின்றனர். மாலை 3மணி வரை அள்ளிவிட்டு வீட்டிற்கு வருகின்றனர். அவர்கள் தங்களின் பிள்ளைகளைக் கூட கவனிக்க முடியவில்லை. பெரும்பாலும் அவர்கள் வீட்டில் அடுப்பு பற்ற வைப்பதே கிடையாது. புருஷனும், பொண்டாட்டியும் சென்று தண்ணியடித்துவிட்டு, கடையில் பரோட்டோவோ அல்லது வேறெதுவோ கார மாக சாப்பிட்டுவிட்டு படுக்கின்றனர். அவர்களை கேட்டால், தண்ணீர் கொதிக் கும் போதும், சாப்பிடும்போதும் பீ ஞாபகம்தான் வருகிறது. எனவே தண்ணீயடிக் கிறோம் என்கிறார்கள். இந்த மக்களிடம் பற்றி தண்ணியடிப்பது குற்றம் என்று நாகரீகம் பேச நமக்கு என்ன யோக்கிதை இருக்கிறது.
நாம் வாழும் சமூகத்தை சரியானதான் மாற்ற நாம் தவறி விட்டோம். எழுத் துக்களின் வந்ததைவிட இந்த மக்களின் வாழ்க்கை கொடூரமானதாக உள்ளது.
குழந்தைகளுடன் பேசக்கூட பலருக்கு தெரியவில்லை. எனது வீட்டருகே ஒரு ஆரம்ப பள்ளி உள்ளது. அங்கே எப் போதும் ஒரே சத்தம். அமைதி, சத்தம் போடாதே, முட்டிப்போடு, என மிரட்டல் சத்தம்தான் கேட்கும். அந்த குழந்தை களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியரும் கட்டையாக மீசை வைத்திருக் கிறார். பார்க்கும்போதே பயமாக இருக்கும். குழந்தைகள் எப்படி சுதந்திரமாக படிக்கும், சிந்திக்கும்?
ஜீவா தனது காலத்தில் ஏற்பட்ட சகலவிதமான மாற்றங் களுக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டார். ஜீவாவின் பழைய படங்களை பார்த்தால் அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு இருப்பார். ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் கம்யூனிச இயக்கம் பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் இருந்தது. பஞ்சாலைத் தொழிலாளர்களின் உடையை அவரும் அணிந்து தொழிலாளர்களுடன் தொழிலாளியாக இருந்தார். ஜீவாவின் பாதையில் மக்களோடு மக்களாக இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவோம்.